இந்தியாஉலக செய்திகள்தமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்விளையாட்டு

காலைநேர பரபரப்பான விரிவான செய்திகள்(15.9.2019) தமிழ்நாடு முதல் உலகம் வரை

advertisement by google

???விண்மீண்தீநியூஸ்???

advertisement by google

துபாய் பாணியில் ஆண்டுதோறும், இந்தியாவில், ஷாப்பிங் திருவிழா நடத்தப்படும் என்று, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

advertisement by google

பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளச் சூழ்நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று சில புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.6 வருடங்களில் இல்லாத அளவுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக சரிவடைந்துள்ள சூழ்நிலையில் மத்திய நிதியமைச்சகம் பல்வேறு பொருளாதார ஊக்க, நடவடிக்கைகளை அறிவித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இன்று செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன் அளித்த பேட்டியில், ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக சிறு மற்றும் குறு தொழில்களுக்கு ஊக்கம் அளிக்கப்படும். துபாய் போலவே இந்தியாவில் மெகா ஷாப்பிங் திருவிழாக்கள் நடத்தி இதற்காக ஊக்கம் தரப்படும். பெரிய அளவிலான கொள்முதல் மற்றும் தொழில் இணைப்பு திட்டங்களுக்கு இது உதவும். – தடையை சீராக்கவும், நமது ஏற்றுமதியாளர்களுக்கு தரச்சான்று வழங்கவும், பிபிபி நடைமுறையில் ஏற்பாடுகள் செய்யப்படும். உலகளாவிய தரத்தை பூர்த்தி செய்ய இந்த நடவடிக்கை உதவும். பொருளாதாரம் புத்துயிர் பெறும் அறிகுறி தெரிகிறது.. நம்பிக்கையாக சொல்கிறார் நிர்மலா சீதாராமன்ஷாப்பிங் திருவிழாக்கள் நடைபெறும் நான்கு இடங்கள் எவை என்பதை, வர்த்தக அமைச்சகம் தீர்மானிக்கும். இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ?♨ சென்னை விமான நிலையத்தில் 2.3 கிலோ எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்

advertisement by google

சென்னை: சென்னை விமான நிலையத்தில் 2.3 கிலோ எடை கொண்ட ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. துபாய், மலேசியாவில் இருந்து வந்த 3 வெவ்வேறு பயணிகளிடம் இருந்து ரூ. 90 லட்சம் மதிப்பு தங்கத்தை சுங்கத்துறையினர் பரிமுதல் செய்தனர்.

advertisement by google

?♨ஊடகதளம்
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ?அரசியல் சூழ்ச்சி ??

advertisement by google

தொழில்துறை துறை புத்துயிர் பெறுவதற்கான தெளிவான அறிகுறியை நாங்கள் காண்கிறோம் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

advertisement by google

டெல்லியில் இன்று நிருபர்களிடம் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ஃபிக்ஸ்ட் முதலீட்டு வீதத்தின் மறுமலர்ச்சியும் தெரிகிறது. பொருளாதாரம் புத்துயிர் பெறுவதற்கான நிலையான அறிகுறிகள் தென்படுகின்றன.2018-19 மற்றும் 19-20ம் நிதியாண்டுகளுக்கு இடையில், அன்னிய நேரடி முதலீட்டில் புத்துயிர் பெறுவதற்கான தெளிவான அறிகுறி உள்ளது. சாதாரண குற்றங்களுக்காக, வரி செலுத்துவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படாது. 25 லட்சம் கீழ் உள்ள நிதி முறைகேடுக்கு எதிராக கிரிமினல் வழக்கு தொடர வேண்டுமானால், கொலிஜீயம் அனுமதி வழங்க வேண்டும். வங்கிகளின் கடன் அளிப்பு விகிதம், அதிகரித்துள்ளது. செப்டம்பர் 19ம் தேதி கடன் வழங்குதல் முறை குறித்து அனைத்து பொதுத்துறை வங்கிகளின் (பி.எஸ்.பி) தலைவர்களையும் சந்தித்து ஆலோசிக்க உள்ளேன். 2020, ஜனவரி 1ம் தேதி முதல், ஏற்றுமதிகள் மீதான வரியை குறைக்க உள்ளோம். ஏற்றுமதி தயாரிப்புகளுக்கான வரிகுறைப்பு, அல்லது வரிகளை நீக்குதல் திட்டம் () ஒரு புதிய திட்டமாகும். இந்த அனைத்து வணிக ஏற்றுமதியையும் முழுமையாக மாற்றும். சிறிய அளவில் வரி ஏய்ப்போர் மீது கிரிமினல் நடவடிக்கை மேற்கொள்ளப்படாது – நிர்மலா சீதாராமன்ஏற்றுமதிக்கு மூலதனத்தை வழங்கும் வங்கிகளுக்கு அதிக காப்பீட்டுத் தொகையை அரசு வழங்கும். இதனால், அரசுக்கு ஆண்டுக்கு ரூ .1700 கோடி கூடுதலாக செலவாகும். இந்தியா ஆண்டுதோறும் மெகா ஷாப்பிங் விழாக்களை நடத்தும். மார்ச் 2020க்குள் முதலாவது மெகா ஷாப்பிங் திருவிழா நடக்கும். இதனால் கைவினைப் பொருட்கள், சிறு, குறு பொருட்கள் உற்பத்தி அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ?♨ பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க வரும் 23-ம் தேதி மத்திய அரசு ஆய்வு

advertisement by google

சென்னை: சென்னையை அடுத்த பழவேற்காடு ஏரி முகத்துவாரத்தை தூர்வாரி தூண்டில் வளைவு அமைக்க வரும் 23-ம் தேதி மத்திய அரசு ஆய்வு நடத்துகிறது. பழவேற்காடு ஏரியில் சுமார் ரூ.27 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று வரும் 23 ம் தேதி பழவேற்காடு முகத்துவாரத்தில் மத்திய சுற்றுச்சுழல் துறை ஆய்வு நடத்துகிறது.

?♨ஊடகதளம்
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ?♨ வேலூர் மாவட்டத்தில் விதிமீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள், பேனர்களை கண்காணிக்க குழு அமைப்பு

வேலூர்: வேலூர் மாவட்டத்தில் விதிமீறி வைக்கப்படும் விளம்பர பதாகைகள், பேனர்களை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. 13 வட்டங்களுக்கு துணை ஆட்சியர் நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.

?♨ஊடகதளம்
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ?♨ இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன்

டெல்லி: இளையோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதி போட்டியில் வங்கதேச அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.

?♨ஊடகதளம்
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

சிவகாசி அருகே பட்டாசு ஆலை தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற வேன் கவிழ்ந்த விபத்தில் சிறுவன் உட்பட, மூவர் உயிரிழந்தனர்

சூரநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 13 பேர் சல்வார்பட்டியிலுள்ள பட்டாசு ஆலையில் வேலை செய்வதற்காக இன்று காலை வேனில் சென்றனர். தாயில்பட்டி சுப்பிரமணியாபுரம் வளைவு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது, வளைவில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், நிகழ்விடத்திலேயே சின்னபாண்டி என்ற சிறுவனும், குருமூர்த்தி என்பவரும் உயிரிழந்தனர்

மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் ராஜா என்பவர் உயிரிழந்தார். இந்த விபத்தில் காயமடைந்த 10 பேருக்கு சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் இருவரது நிலை கவலைக்கிடமாகவுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

கோலாலம்பூர் துபாயிலிருந்து சென்னை வந்த 3 பயணிகளிடமிருந்து ரூ.91 லட்சம் மதிப்புள்ள 2 கிலோ 300 கிராம் தங்கம் பறிமுதல்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

கல்விக்கட்டணம் செலுத்தாததால் தேர்வு எழுத அனுமதி மறுப்பு: மாவட்டக்கல்வி அலுவலர் விசாரணை

கல்விக்கட்டணம் செலுத்தாத 7 ஆம் வகுப்பு மாணவி யுகிதாவை காலாண்டுதேர்வு எழுத அனுமதி மறுத்த மயிலாடும்பாறை ஹயக்ரீவா மெட்ரிகுலேசன் பள்ளியில் மாவட்டக்கல்வி அலுவலர் விசாரணை

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

மக்கள் அவரவர் தாய் மொழி, இணைப்பு மொழி மற்றும் விருப்ப மொழி என எம்மொழியையும் கற்கலாம்

ஒரே மொழி இந்தி மொழி என்பதை ஜனநாயகத்தில் ஏற்றுக்கொள்ள முடியாது – தமாகா தலைவர் வாசன்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

இந்தியா முழுவதற்கும் இந்தியை அமல்படுத்த நினைப்பது இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரானது

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்டேசன் கண்டனம்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

லாரியை அதிவேகத்தில் இயக்க மாட்டோம்; விபத்தில்லா தமிழகத்தை உருவாக்குவோம்

தண்ணீர் லாரி உரிமையாளர்கள் உறுதிமொழி

பேனர் விழுந்து தண்ணீர் லாரி மோதி உயிரிழந்த சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு லாரி உரிமையாளர்கள் சங்கம் இரங்கல்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

“பிகில் பட இசை வெளியீட்டின் போது ரசிகர்கள் யாரும் பேனர்கள் வைக்கக்கூடாது”

ரசிகர் மன்றங்களுக்கு நடிகர் விஜய் வலியுறுத்தல்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: •┈┈•❀ ?? NEWS?❀•┈┈•

சட்டவிரோத பேனர்களை அகற்றுவதற்கு பதிலாக, வேலூர் மாவட்டம் ஆம்பூரில் கடைகள் மீது வைக்கப்பட்ட பெயர் பலகைகளை அகற்றியதால், வணிகர்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

ஆம்பூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் திரையரங்கு, வணிக வளாகங்களில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை இன்று காலை நகராட்சி ஆணையாளர் சௌந்தர்ராஜன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் அவசர அவசரமாக அகற்றினர். சிறுசிறு கடைகள் மீது வைக்கப்பட்டுள்ள பெயர் பலகைகளையும் அகற்ற முற்பட்டதால், வணிகர்களுக்கும், நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

ஒருநாள் அவகாசம் அளிக்குமாறு வணிகர்கள் கேட்டுக்கொண்டதை அடுத்து, கடையிலுள்ள பெயர் பலகை பேனர்களை அகற்றாமல் அதிகாரிகள் சென்றனர்

•┈┈• ❀ ? ?news ?❀ •┈┈•
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின் கீழ், நாகலாந்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர்களுக்கு ரூ.6.5 லட்சம் அபராதம்

சரக்கு வாகனத்தில் ஆட்களை ஏற்றியது, காற்று-ஒலி மாசு ஏற்படுத்தியது உள்ளிட்ட விதி மீறல்களுக்காக அபராதம் விதித்தது ஒடிசா அரசு
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅கோவை : சோமனூர் அருகே மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த கணவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி கோவை அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத கிடங்கில் உடலை வாங்க அவரது மனைவி மறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிக்குமார் பொள்ளாச்சியில் தனது மனைவி குழந்தையுடன் வசித்து வந்தார். செல்போன் வியாபாரம் செய்துவரும் ரவிக்குமார் கடந்த 11ம் தேதி வீட்டில் இருந்து பணி நிமித்தம் மேட்டுப்பாளையம் சென்றார். ஆனால் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
பின்னர் கடந்த 13ம் தேதி சோமனூர் அருகே ஒரு தோட்டத்தில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதில் கடந்த 12ம் தேதி ரவிக்குமார் அவருடன் பணியாற்றும் மூன்று பேருடன் மது அருந்தியதாகவும் இதில் போதை அதிகளவில் ஏறிய ரவிக்குமாரை அவருடன் வந்தவர்கள் விட்டுச் சென்றதாகவும் இதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர் உயிரிழந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஆனால் இறந்த ரவிக்குமாரின் உறவினர்கள் அவரது உடலில் காயங்கள் உள்ளதாகவும், அவரிடமிருந்த ஏ.டி.எம், பணம், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மொபைல் போன்களை காணவில்லை எனவும், அவருடன் மது அருந்திய 3 பேரிடம் உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கோரிக்கையை வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கும் வரை ரவிக்குமாரின் உடலை வாங்க மாட்டோம் என ரவிக்குமாரின் மனைவி மற்றும் உறவினர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு உடலைப் பெற்றுக்கொண்டனர்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅திருப்பூர் காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழாவிற்காக வைக்கப்பட்ட தேமுதிக கொடி கம்பங்களை அப்புறப்படுத்திய அதிகாரிகளுடன் தேமுதிகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை பள்ளிக்கரணையில் சாலையின் நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் சரிந்து விழுந்ததில் இளம்பெண் சுபஸ்ரீ நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி, சுபஸ்ரீ மீது மோதியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் சில கட்டுப்பாடுகளை அறிவித்திருந்த நிலையில், கட்சித் தலைவர்களும் பொது மக்களுக்கு இடையூராக பேனர்கள், கொடிகளை வைக்கக் கூடாது என தங்கள் கட்சியினருக்கு அறிக்கை வெளியிட்டிருந்தனர்.
இந்நிலையில், திருப்பூர் காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நாளை நடைபெறுகிறது. இதனையடுத்து அக்கட்சித் தலைவர் விஜயகாந்த், பிரேமலதா ஆகியோரை வரவேற்கும் விதமாக திருப்பூர் — காங்கயம் சாலையில் தேமுதிக சார்பில் பொது மக்களுக்கு இடையூறாகப் பிளக்ஸ் பேனர்களும், கொடி கம்பங்களும் அமைக்கப்பட்டிருந்தது,
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக இருந்த தேமுதிக கட்சி பேனர்களையும், கொடி கம்பங்களையும், அப்புறப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்ட போது, சம்பவ இடத்திற்கு வந்த தேமுதிகவினர், பேனர்களையும், கம்பங்களையும் அகற்றக் கூடாது என மாநகராட்சி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், தேமுதிகவின் முப்பெரும் விழா பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தேமுதிகவின் நிறுவனரும் பொதுச் செயலருமான விஜயகாந்த் திருப்பூர் வந்தார். அவரை வரவேற்க ஏராளமான கட்சி தொண்டர்கள் திருப்பூர் பெருமாநல்லூர் பகுதியில் காத்திருந்து அவரை வரவேற்றனர். அவருடன் கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் மற்றும் விஜய பிரபாகரன் உள்ளிட்டோர் திருப்பூர் வந்தடைந்தனர்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅கோவை இரயில் நிலையம் அருகே உள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை அலுவலகத்தில் மேற்கு மண்டல தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை சார்பாக சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களின் பணியைப் பாராட்டித் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறையின் டிஜிபி காந்திராஜன் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.

தீயணைப்புத் துறை என்பது “காப்பதே எமது கடமை” என்ற வரியைத் தாரக மந்திரமாகக் கொண்டு செயல்படக்கூடிய துறை. இவர்கள் தீயணைப்பதுடன் நின்றுவிடாமல் பல்வேறு மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கு மண்டலத்தில் கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட இயற்கை சீற்றங்கள் மற்றும் விபத்துகளில் தீயணைப்பு வீரர்கள் சிறப்பாகச் செயல்பட்டு பல்வேறு வீர சாகசங்களைச் செய்து உள்ளனர்.
குறிப்பாக இன்று மேற்கு மண்டல எல்லைகளான நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு, மண்சரிவு, வெள்ளப்பெருக்கு, சாலையில் விழுந்த மரங்கள், மண்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி, அதேபோல் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பு, கோவையில் அண்மையில் பெய்த மழை காரணமாக பவானி மற்றும் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு, ஆற்றில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள், குறிப்பாக வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து ஆகியவற்றில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களுக்கு பாராட்டுகள் வழங்கப்பட்டது.
அதேபோல தீயணைப்புத் துறை சார்பாக பள்ளிகளில் விபத்தில்லா தீபாவளி பண்டிகை கொண்டாட்டம் குறித்து கட்டுரைப்போட்டி நடத்தி, அதில் சிறப்பாக கட்டுரை எழுதிய 20க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பரிசுகளும் நற்சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இந்த பாராட்டுக்களையும் நற்சான்றிதழ்களையும் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறையின் டிஜிபி காந்திராஜன் வழங்கினார்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் கல்லார் இரண்டாவது கொண்டை ஊசி வளைவில் அரசுப்பேருந்து லாரி, கார் என நான்கு வாகனங்கள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டு சாலையின் நடுவே நின்றதால் ஒரு மணி நேரத்திற்கும் மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை நோக்கி குன்னூர் சாலையின் வழியே அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது, அப்போது உதகையில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு இரும்பு ஏற்றிக் கொண்டு வந்த லாரி ஒன்று தாறுமாறாக வந்து கொண்டிருந்தது. அந்த லாரி முன்னே சென்ற கார் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று எதிரே வந்த கேஸ் சிலின்டர் வாகனம் மீது மோதியது, பின்னர் எதிரே வந்த அரசுப்பேருந்து மீது மோதியது. அதற்குப் பின்னர் ஒரு இருசக்கர வாகனத்தின் மீதும் மோதி விபத்து ஏற்பட்டது.
இதில் அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநர், இருசக்கர வாகனத்தில் வந்தவர் என மூவர் காயமடைந்தனர். விபத்து ஏற்பட்டதில் வாகனங்கள் ஒன்றன்பின் ஒன்றாக அடுத்தடுத்து மோதி சாலையின் நடுவே நின்றது. இதனால் மற்ற வாகனங்கள் அனைத்தும் சாலையைக் கடக்க முடியாமல் நீண்டதூரம் வரிசை கட்டி நின்றதில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேட்டுப்பாளையம் காவல்துறையினர், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு முதலுதவி சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு, பின் கோவை அனுப்பிவைக்கப்பட்டனர். இந்த விபத்தால் சாலைகளின் இரு புறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன, இதனால் ஒரு மணிநேரமாக வாகன ஓட்டிகள் செய்வதறியாது நின்றனர், பின்னர் காவல்துறை போக்குவரத்தைச் சீர் செய்த பின்னர் மீண்டும் போக்குவரத்து துவங்கியது..விபத்து குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅கோயம்புத்தூர்‌ மாநகராட்சிக்குட்பட்ட100 வார்டுகளிலும்‌ உள்ள அனைத்து கட்டிடங்களிலும்‌ மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள்‌ ஏற்படுத்துவது குறித்து தனியார்‌ நிறுவனத்தின்‌ சார்பில்‌ சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இந்த சிறப்பு பயிற்சி வகுப்பில்‌ மாநகராட்சியின்‌ அனைத்து இளம்‌ பொறியாளர்கள்‌, உதவி பொறியாளர்கள்‌, குடிநீர் விநியோக இளம்‌/௨ தவிப்‌பொறியாளர்கள்‌, உதவி நிர்வாகப்‌ பொறியாளர்கள்‌ ஆகியோர்களுக்கு தனியார்‌ நிறுவனத்தினர்‌ மழைநீர்‌ சேகரிப்பு குறித்து செயல் விளக்கம்‌ அளித்தனர்‌.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, சுற்றுலாத் தலமான தொட்டபெட்டா காட்சி முனைக்குச் செல்லும் வழியில், ஒரு கோடியே 89 லட்சம் செலவில் புனரமைக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் சாலையைத் திறந்து வைத்தார்.

பின்னர், பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு 2500 ஹெக்டர் அளவிலான விளைநிலங்களுக்கு காய்கறி வீரிய விதைகளை வழங்கிய அமைச்சர் வேலுமணி, 250 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடக் கூடிய கமலா ஆரஞ்சு நாற்றுகளையும் விவசாயிகளுக்கு வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவ மாணவியருக்கு விலையில்லா மடிக்கணினி வழங்குதல் பெண்களுக்கு இருசக்கர வாகனம் வழங்குதல் மற்றும் புதிய அடுக்குமாடிக் குடியிருப்பிற்கான கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர் பேசுகையில், உள்ளாட்சித் தேர்தல் குறித்து உச்ச நீதிமன்றத்திலேயே தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையம் கேட்கும் உதவியை அரசு செய்து கொடுக்கும் என்றார்.
மேலும், 50 ஆண்டுகாலத்திற்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை தமிழக அரசு நிறைவேற்றி உள்ளதாகவும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு இந்தியாவிலேயே அதிக கடன் வழங்கியது தமிழக அரசு தான் என்று கூறிய அவர், உதகையில் மருத்துவக் கல்லூரி அமைப்பது தொடர்பாக முதல்வரிடம் வலியுறுத்தப்படும் எனவும் அம்மாவின் சொந்த மாவட்டம் நீலகிரி என்பதால் பல்வேறு திட்டங்களையும் தற்போது நிறைவேற்றி வருவதாக கூறினார்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅கோவை : பில்லூர் அணையின் நீர்த்தேக்க பகுதிகளில் பெய்த கனமழை மற்றும் அதிகப்படியான நீர் வரத்து காரணமாக பரளிக்காடு சுற்றுலா மீண்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதியான பரளிக்காடு என்னுமிடத்தில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் பழங்குடியின மக்கள் இணைந்து நடத்தும் சூழல் சுற்றுலா நடைபெற்று வருகிறது. இயற்கை எழில் மிகுந்த மலைக்காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர்தேக்க பகுதியில் நடைபெறும் இந்த சூழல் சுற்றுலாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர்.
வார விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் நடத்தப்படும் இச்சூழல் சுற்றுலாவில் அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணையின் நீர் தேக்க பகுதியில் பயிற்சி பெற்ற பழங்குடியின மக்களுடன் பாதுகாப்பான பரிசல் பயணம், ஆற்றுக்குளியல், பழங்குடியின மக்கள் தயாரித்து வழங்கும் சுவையான இயற்கை உணவு, அடர்ந்த காட்டில் ட்ரக்கிங் ஆகியவை வனத்துறையினரின் கண்காணிப்பில் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு மாதகாலமாகவே மேற்குத்தொடர்ச்சி மலைக்காடுகளில் பெய்து வரும் கனமழை காரணமாக பில்லூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்தபடி இருந்தது. பில்லூர் அணை முழு கடந்த ஒரு மாதத்தில் மூன்று முறை கொள்ளளவை எட்டியதால் அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்பட்டது. மேலும் அதிகப்படியான நீர் அணையில் தேங்கி இருப்பதனால் இந்த சூழல் சுற்றுலா நடைபெறும் இடமான பரளிக்காடு பகுதி முழுவதும் தண்ணீருக்கடியில் மூழ்கி வெள்ளக்காடாக மாறியுள்ளதால் பரிசல்கள் இயக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனால் சுற்றுலா வரும் பயணிகளின் பாதுகாப்பு கருதி வரும் ஞாயிற்றுக்கிழமை வரை சூழல் பரளிக்காடு சுற்றுலா ரத்து செய்யப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
இதனால் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த சூழல் சுற்றுலா நடைபெறாமல் தள்ளிப் போவதால் இதனை நம்பி வேலைவாய்ப்பு பெற்று வந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது. பரிசல் இயக்குவது மற்றும் உணவு தயாரிப்பது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டுவந்த பழங்குடியின தொழிலாளர்கள் ஆண்கள்,பெண்கள் என 50க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பின்றி இருப்பதால் அவர்களது வருவாய் பாதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா பெற்றுக்கொண்டார்.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட்திவ்யா அவர்கள் தலைமையில் கடந்த 9ம் தேதி மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனைப்பட்டா, தொழில் மற்றும் கல்விக் கடன் உதவி, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் மற்றும் மின்சார வசதிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 227 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அவர்களிடம் பொதுமக்கள் அளித்த இம்மனுக்களின் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் கடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தீர்வு காணாமல் நிலுவையிலுள்ள மனுக்களின் மீது விரைவான நடவடிக்கை எடுக்குமாறு துறை ரீதியான அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டார்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தாட்கோ மூலம் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்புத்திட்டத்தின் கீழ் ரூ.7,79,125/- இலட்சம் மதிப்பில் மானியத்துடன் கூடிய லோடு வாகனத்தையும், மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதி திட்டத்தின் கீழ் துணிக்கடை மற்றும் பெட்டிக்கடை வைப்பதற்காக தலா ஒரு பயனாளிக்கு ரூ.20,000/- வீதம் 6 பயனாளிகளுக்கு ரூ.1,20,000/-த்திற்கான காசோலையினையும், சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் கட்டுமான தொழிலாளர்கள் விபத்து நிதியிலிருந்து உதகை சன்சைன் ஓட்டல் அருகில் மண்சரிந்து விழுந்து உயிரிழந்த தேவி என்பவரின் மகள்களுக்கு ரூ.2,50,000/-த்திற்கான காசோலையினையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅மேட்டுப்பாளையம் அருகே பவானி ஆற்று ஏற்பட்ட வெள்ளத்தால் 50,000 வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கிய நிலையில் தமிழக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என வாழை விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தென்மேற்கு பருவமழையானது இந்தாண்டு மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளில் மிகதீவிரமாக பெய்தது. குறிப்பாக கேரளா மற்றும் நீலகிரித்தில் கனமழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தின் பவ பகுதிகளிலும் பரவலாக தென்மேற்கு பருவ மழையானது பெய்தது. தொடர்ந்து பெய்த பருவமழை காரணமாக பில்லூர் அணை மூன்று முறைக்கு மேல் நிரம்பியதால் அதன் உபரி நீர் வெளியேற்றப்பட்டது.
இந்நிலையில், வெளியேற்றப்பட்ட உபரி நீர் பவானி சாகர் அணையை அடைவதால் பவானி சாகர் அணை 97அடியை எட்டி தண்ணீர் தேக்கப்பட்டதால் சிறுமுகை லிங்காபுரம், காந்தவயல், கூத்தாமண்டி போன்ற பகுதிகளில் பயிர் செய்யப்பட்டிருந்த ஏராளமான வாழை மரங்களை தற்போது தண்ணீர் சூழத்துவங்கியுள்ளன. லிங்காபுரம்,காந்சவயல், உளியூர் போன்ற கிராமங்களில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்த நிலையில், தற்போது பவானி ஆற்றின் வெள்ளம் காரணமாக விளைநிலங்களில் தண்ணீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி வருகிறது.
மேலும், தற்போது வாழை மரங்களின் அடிப்பகுதியில் தண்ணீர் படிப்படியாக சூழ்ந்து வருவதால் பவானி சாகர் அணையின் நீர் மட்டம் உயர உயர மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தண்ணீரில் மூழ்கி நாசமாகிவிடும் என விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக வெள்ளத்தில் வாழை மரங்கள் மூழ்குவதால் சாகுபடி செய்த விவசாயிகள் கடும் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர். எனவே தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
[9/15, 10:09 AM] விண்மீண்தீநியூஸ்: ✍?✅கோவை அடுத்த தடாகம் பகுதியில் வாடகைக்கு குடியிருந்தவர் போகியத்திற்கு குடியிருந்ததாக போலியான ஆவணங்களை தயார் செய்து மோசடியில் ஈடுபட முயன்ற சம்பவத்தில் மாநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்

கோவை தடாகம் சாலை அருகே உள்ள கோவில் மேட்டில் வசித்து வரும் சண்முகத்தின் மகள் கலைவாணி(22). இவர்களுக்கு தடாகம் சாலையில் உள்ள வேலாண்டிபாளையத்தில் சுமார் ஐம்பது லட்ச ரூபாய் மதிப்பில் கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் கவுண்டம்பாளையம் பகுதியைச் சேர்ந்த அழகு சாமி (43) என்பவர் 2016 ஆம் ஆண்டு முதல் பேக் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சண்முகம் உயிரிழந்த பிறகு, அழகு சாமி வாடகைத் தொகை தரவில்லை.
இதைத்தொடர்ந்து சண்முகத்தின் மகள் கலைவாணி அழகு சாமியிடம் கேட்டபோது, அவர் 11 லட்ச ரூபாய்க்கு போக்கிய ஒப்பந்தம் போட்டு இருப்பதாகவும் அந்த தொகையை கொடுத்தால் காலி செய்வேன் எனவும் இல்லை என்றால் 20 லட்ச ரூபாய்க்கு தனக்கே கிரயம் செய்து கொடுக்க வேண்டும் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதையடுத்து கலைவாணி, வாடகைக்கு குடியிருந்த அழகு சாமியும், அவரது மனைவி உஷாவும் சேர்ந்து, போலியான ஆவணங்களை தயாரித்து, எங்கள் சொத்தை அபகரிக்க முயற்சிசெய்கின்றனர். இது தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்திருந்தார்.
இது தொடர்பாக, மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் ஆகியோரது உத்தரவின் பேரில், உதவி ஆய்வாளர் ஜமுனா தலைமையிலான மாநகர குற்றப்பிரிவு காவல்துறையினர் மோசடி, கொலை மிரட்டல், போலி ஆவணம் தயாரித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்தனர். அதன் இறுதியில், அழகு சாமி கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

advertisement by google

Related Articles

Back to top button