இந்தியாதமிழகம்தமிழ்நாடு மாவட்டம்தொழில்நுட்பம்

மலைரயில் தினந்தோறும் இயக்கப்படும், பார்க்கபடும் அதிசயம் , உதகைக்கு

advertisement by google

?விண்மீண்நியூஸ்? ✍✅கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து தினந்தோறும் உதகைக்கு மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வருகிறது. மலைகளின் நடுவே அடர்ந்த வனத்தில் பயணிக்கும், உலக பரம்பரியமிக்க இந்த மலை ரயிலில் பயணித்து இயற்கை அழகினை ரசிக்க உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

advertisement by google

இந்நிலையில் மலை ரயில் சுற்றுலாவை ஊக்கப்படுத்தும் வகையில் தெற்கு ரயில்வே மலை ரயிலை நவீனபடுத்தி வருவதுடன் சுற்றுலா பயணிகளை கவர சிறப்பு மலை ரயில் சேவைகளை ஏற்படுத்தி வருகிறது. மேலும், கூடுதல் ரயில் பெட்டிகளை இணைக்கவும் திட்டமிட்டு அதற்கான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக, இதுவரை இருந்து வந்த மரத்தால் ஆன பழைய ரயில் பெட்டிகளை தவிர்த்து தற்போது புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய ரயில் பெட்டிகள் சென்னை பெரம்பலூரில் உள்ள ஜ.சி.எப் தொழிற்சாலையில் தயாரிக்கபட்டு வந்தன.
மொத்தம் 15 ரயில் பெட்டிகள் தயாரிக்கபட்ட நிலையில் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு கொண்டு வரபட்ட நிலையில், இன்று மேலும் நான்கு பெட்டிகள் கொண்டுவரபட்டன. இதில் இரும்பு மற்றும் கண்ணாடிகளை அதிக அளவில் பயண்படுத்தபட்டு அழகான வடிவில் நவீன பெட்டிகள் அமைக்கபட்டுள்ளன.
மேலும் எடை குறைவான முறையில் தயாரிக்கபட்ட இந்த பெட்டிகள் சிறப்பு கூட்ஸ் ரயில் மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திற்கு இன்று கொண்டுவரபட்டது. பின்னர், திருச்சி பொண்மலை ரயில்வே பணிமலையில் இருந்து ராஜாளி என்ற ராட்சத கிரேன் கொண்டுவரபட்டு மேட்டுப்பாளையம் ரயில்வே அதிகாரிகள் முன்னிலையில் இன்று புதிய ரயில் பெட்டிகள் இறக்கபட்டன.
தண்டவாளத்தில் இறக்கிவைக்கபட்ட ரயில் பெட்டிகளை ரயில்வே அதிகாரிகள் ஆய்வு செய்தனர். விரைவில் இந்த பெட்டிகளை மலை ரயிலில் இணைத்து சோதனை ஓட்டம் நடத்தபட்ட பின்னர் பயண்பாட்டிற்கு கொண்டுவர உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
[9/15, 7:51 AM] விண்மீண்நியூஸ்2: ✍?✅நீலகிரி மாவட்டம் குன்னூரில் இருந்து திருச்சி பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நீராவி என்ஜின் புனரமைத்து, மீண்டும் மே மாத கோடை சீசனுக்கு முன் இயக்க ரெயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுத்துவருவதாக அதிகாரிகள் தெரிவி்த்துள்ளனர்.

advertisement by google

நீலகிரி மலை ரெயில் சேவை ஆங்கிலேயர் காலத்தில் தொடங்கப்பட்டது. இந்த என்ஜின்களில் எக்ஸ் 37384 என்ற எண் கொண்ட நிலக்கரி நீராவி என்ஜின் 1914-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் தயாரிக்கப்பட்டு, 1918-ம் ஆண்டு நீலகிரி மலை ரெயில் சேவையில் இணைக்கப்பட்டது.
முன்னதாக, பழமையான எக்ஸ் 37384 நிலக்கரி நீராவி என்ஜினை காட்சி பொருளாக வைக்க ரெயில்வே நிர்வாகம் திட்டமிட்டது. இதற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பழமையான நிலக்கரி நீராவி என்ஜினை இயக்க வேண்டும் என்று ரெயில்வே வாரியத்திடம் மனு கொடுத்தனர். இதன்படி காட்சி பொருளாக வைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.
இதையடுத்து கடந்த 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ந் தேதி எக்ஸ் 37384 எண் கொண்ட நிலக்கரி நீராவி என்ஜின் மூலம் ரெயில் இயக்கப்பட்டது. இது சுற்றுலா பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றாலும், உந்து சக்தி குறைவால் அடிக்கடி பழுதானது.
இதனை தொடர்ந்து ரெயில்வே நிர்வாகம் பழமையான நிலக்கரி நீராவி என்ஜினை புனரமைத்து இயக்க முடிவு செய்தது. இதன் அடிப்படையில் திருச்சி பொன்மலையில் உள்ள ரெயில்வே என்ஜின் பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. பணிகள் முடிந்தால் வரும் மே மாத கோடை சீசனில் இந்த மலைரயில் என்ஜினை இயக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google

advertisement by google
advertisement by google

Related Articles

Back to top button